Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேளாண் பல்கலையில் கோடை கால பயிற்சி முகாம்

கோவை, மே 4: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை, வேளாண் பொறியியல் கல்லூரியில் வரும் 6-ம் தேதி மற்றும் ஜூன் 1ம் ஆகிய தேதிகளில் 7 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கணினி திறன்களை கற்க கோடைக்கால பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் குழந்தைகளின் கணினி திறனை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.

பயிற்சிகள் அரைநாள், முழு நாள் அளவுகளில் நடத்தப்படுகிறது. இதில், அரைநாள் பயிற்சிக்கு ரூ.354 கட்டணமும், முழு நாள் பயிற்சிக்கு ரூ.708 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை பல்கலையின் பேராசிரியர் பாலாஜி கண்ணன் 97899-82772, சுமதி 94420-78081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.