மதுக்கரை, ஜூலை 26: மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணா கல்விக்குழுமத்தின் அறங்காவலர் ஆதித்யா தலைமை வகித்தார். சிஇஓ சுந்தரராமன் முன்னிலை வகித்தார். முதல்வர் டாக்டர் பழனியம்மாள் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கலெக்டர் பவன்குமார், போதைபொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து பேசினார். அப்போது, கல்லூரி மாணவர்கள், சமூகத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வை பரப்பும் தூதர்களாக இருந்து செயல்பட வேண்டும். மாணவர்களின் 18 முதல் 25 வயது வரை உள்ள பருவம் முக்கியமானது. இந்த வயதில் அவர்கள், மிகப்பெரிய பதவிகளில் பொறுப்பேற்கும் குறிக்கோளுடன் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தானும் தன்னை சுற்றியுள்ள சமுதாயமும் முன்னேற உறுதியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகள் அனைவரும் போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
+
Advertisement