கோவை, ஆக. 2: கோவை பீளமேடு அண்ணாநகரில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், மண், மொழி, மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை வீடு வீடாக சென்று திமுக கழக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் சசிகுமார், நோயல் செல்வம், சரஸ்வதி புஷ்பராஜ், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச்செழியன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஸ்ரீ சத்யா கோவை தங்கம், வழக்கறிஞர்கள் சி.கண்ணன், முத்து விஜயன், இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.