Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரமடையில் ஆக.5ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக. 1: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ‘’காரமடை நகராட்சி சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து, நகராட்சிக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பது’’ உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ., அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஓ.கே.சின்னராஜ், காரமடை நகர செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.