கோவை, செப்.22: கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் அத்துமீறி வலதுபுறம் செல்வதாக புகார் அதிகரித்தது. பைபாஸ் ரோடு குறுகலாக இருப்பதால் சென்டர் மீடியன் அமைக்கப்படவில்லை. வாகனங்கள் இல்லாத பகுதியில் இட பக்கம் செல்லும் வாகனங்கள் வலது புறம் முந்தி செல்லும் நிலையிருக்கிறது. ஆனால் போக்குவரத்து அதிகமாக இருக்கும் போதும் வாகனங்கள் வலது பகுதியில் ஏறி முந்தி செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பைபாஸ் ரோட்டின் முக்கிய பகுதிகள் மற்றும் ரோடு சந்திப்பு சந்திப்பு இடங்களில் வழியை தடுக்கும் வகையில் ஆரஞ்ச் நிறத்தில் பிளாஸ்டிக் தடுப்புகள் ( லேன் டிவைடர்) புதிதாக வைக்கப்பட்டிருந்தது. இந்த தடுப்புகள் நிரந்தரமாக இருக்கும் வகையில் ஆணி அடித்து வைக்கப்பட்டது. ஆனால் இவற்றை பற்றி கவலைப்படாமல் சில வாகன ஓட்டிகள் டிவைடர்கள் மீதும் வாகனங்கள் ஏற்றி ெசன்றுள்ளனர். இதனால் பல இடங்களில் டிவைடர்கள் நாசமாகி விட்டது. மதுக்கரை, ஈச்சனாரி ரோடு சந்திப்பு, செட்டிபாளையம் ரோடு சந்திப்பு, மேம்பாலம் சந்திப்பு, பட்டணம் சந்திப்பு என பல இடங்களில் டிவைடர்கள் சேதமாகி விட்டது. இந்த இடங்களில் வாகனங்களின் அத்துமீறல் தடுக்க கான்கீரிட் தடுப்பு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement