கோவை, ஜூலை 24: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நிதியுதவி கேட்டு ஆதரவற்ற குழந்தைகள் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், தந்தை அல்லது தாயை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தாய்-தந்தை, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்பட மாதம் ரூ.4 ஆயிரம் வரை, ஒன்றிய அரசின் திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது.
இந்த நிதியுதவி கேட்டு, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் அலுவலகத்தில், ஆதரவற்ற குழந்தைகள் நேற்று மனு அளித்தனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் அதிகாரிகள் கூறினர்.