மதுக்கரை.செப்.14. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல்லை சேர்ந்த நகை வியாபாரி ஜெய்சங்க ஜேக்கப் (55). இவர் கடந்த ஜூன் 14ம் தேதி ரூ.1.25 கோடி தங்க கட்டிகளுடன் தனது ஊழியர் விஷ்ணு என்பவரை அழைத்துக்கொண்டு கோவை வழியாக திருச்சூர் காரில் புறப்பட்டார்.
மதுக்கரை அடுத்த எட்டிமடை அருகே 5 பேர் கும்பல் லாரியை மறித்து இவர்களை தாக்கி ரூ.1.25 கோடி தங்க கட்டிகளை வழிப்பறி செய்து தப்பினர். இது குறித்து க.க. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அர்ஷத் (34), சனுப் (34), அனீஸ் (30) ஆகிய 3 பேரை வாளையாரில் கைது செய்தனர்.