கோவை,செப். 14: கோவை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (15ம் தேதி) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டம்பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துக்கவுண்டன் புதூர் (ஒரு பகுதி), வலையபாளையம் (ஒரு பகுதி) மற்றும் வாகராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement