மேட்டுப்பாளையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அலற விடும் தனியார் பேருந்துகள் வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
மேட்டுப்பாளையம், டிச.11: தடையை மீறி ஏர் ஹாரன்களை பயன்படுத்திய 5 தனியார் பேருந்துகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்தார். பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’ எனப்படும் ஒலிப்பான்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை வாகனங்களில் பொருத்தி பயன்படுத்துவோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்றி வருவதோடு அபராதமும் விதித்து வருகின்றனர்.
இருப்பினும் பல தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும் விதிகளை பின்பற்றாமல் தடையை மீறி ஏர் ஹாரன்களை பொருத்தி சாலைகளில் அலற விட்டு சாலையில் செல்வோரை அச்சத்தில் ஆழ்த்துகின்றனர். இதனால் அவ்வப்போது சாலை விபத்துகளும் நேர்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமையில் குழுவினர் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.


