Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோழக்கட்டு கிராமத்தில் திமுக நிர்வாகி படத்திறப்பு: சோழக்கட்டு கிராமத்தில்

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் லத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.இராமச்சந்திரன் படத்திறப்பு விழா காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் லத்தூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் (59). திமுக கட்சியில் 2002 முதல் ஒன்றியக் கழகச் செயலாளராகவும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், 2006ல் ஒன்றியக் குழு பெருந்தலைவராகவும், 2021 முதல் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மனைவி சாந்தி ராமச்சந்திரன் தற்போது லத்தூர் ஒன்றிய பெருந்தலைவராக உள்ளார். இந்நிலையில், கே.எஸ்.ராமச்சந்திரன் ஜூன் 22ம் தேதி மாலை உடல் நலக்குறைவால் மறைந்தார். இதனை தொடர்ந்து, ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் படத்திறப்பு விழா நிகழ்ச்சி சோழக்கட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மேலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், தொகுதி பொறுப்பாளர் இசை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்டோர் கே.எஸ்.ராமச்சந்திரன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், மாவட்ட அவை தலைவர் இனியரசு, ஒன்றிய செயலாளர்கள் சாலவாக்கம் குமார், குமணன், குமார், சிவக்குமார், சிற்றரசு, சரவணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், நிர்வாகிகள் ஏமநாதன், பாண்டுரங்கன், லோகநாதன் வெங்கடேசன், சுந்தர வடிவழகன், ராமமூர்த்தி, மணி, கதிர், கோபிநாத், அருண்மொழிவர்மன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன் தாஸ், பாரதி பாபு, ஆதிலட்சுமி ஞானவேல் அரேபியன் கார்டன் நிறுவனர் நபில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.