தாம்பரம், ஜூலை 24: குரோம்பேட்டை, நியூ காலனி, 1வது பிரதான சாலையில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு சீரான மின்சாரம் விநியோகிக்க டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் இந்த டிரான்ஸ்பார்மர் நேற்று காலை திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பின்னர் உடனடியாக மின்வாரியம் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் மின் இணைப்பை துண்டிக்க செய்து பின்னர் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக அனைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.