Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கழிப்பறை திருவிழா 3.0 விழிப்புணர்வு நிகழ்ச்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.37.79 லட்சம் நலத்திட்ட உதவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் *வழங்கினார்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப்தூய்மை மிஷன்சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து கழிப்பறையை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கழிப்பறை திருவிழா 3.0 நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கழிப்பறைகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளும் டாய்லெட் ரிப்பேர் கபே வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து புகைப்பட கண்காட்சி மற்றும் அரங்கங்களை பார்வையிட்டுமாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும்தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் இணைய தளம் வடிவமைப்பு கருவிப் பெட்டி இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளியின் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான சுகாதாரம் குறித்த புத்தகங்களை வெளியிட்டுசேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்ளும் 150 மாணவ சுகாதார அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர் நலவாரியத்தின் சார்பில் விபத்து மரண நிவாரணத்தொகைஇயற்கை மரண நிவாரணத் தொகைதிருமண உதவித் தொகைமகப்பேறு உதவித் தொகைகல்வி உதவித் தொகைஉள்ளிட்ட நலத்திட்டங்களின் கீழ் 30 பேருக்கு மொத்தம் 12,79,000 ரூபாய்க்கான காசோலைகளயும்தாட்கோ மூலமாககாஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் சங்கத்திற்கு சிறு வணிகக் கடனாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பள்ளி மாணவர்களிடையே கழிப்பறை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுகழிப்பறை சுகாதாரம் சார்ந்து நடத்துவதுபொதுக் கழிப்பிடங்களை மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதுபள்ளிக்கு ஒரு ஹெல்த் மினிஸ்டரியை உருவாக்குவது. கழிப்பறைகளில் ஏதாவது இடர்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக Toilet Repair Cafe Model அமைப்பது போன்ற திட்டங்களை மனதார பாராட்டுகிறேன். தூய்மைப் பணியாளர்கள் தான் சென்னையுடைய அன்னைதாய் என்று நான் பல நேரங்களில் பெருமையாக குறிப்பிட்டது உண்டு.

அந்த அளவுக்கு ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை பார்த்துக் கொள்வது போலதூய்மைப் பணியாளர்கள் தான் நீங்கள் தான்சென்னையை பார்த்துக் கொள்கிறீர்கள். சென்னை என்கிற குழந்தை உங்களுடைய கைகளில் பத்திரமாக இருக்கிறது. சென்னையில் மட்டுமல்லதமிழ்நாடு முழுவதும் உங்களுடைய பணி என்பது போற்றத்தக்கதுமகத்தானது. உங்கள் பணி மட்டும் அல்ல. உங்களுடைய உள்ளமும் மிகவும் தூய்மையானது என்பதை அறிவேன். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் செய்வது வெறும் தூய்மைப்பணி மட்டும் அல்ல. அது மனித குலத்துக்கே நீங்கள் செய்கின்ற ஒரு மாபெரும் தொண்ட இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு­சென்னை மேயர் பிரியாசிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பிரதீப் யாதவ்தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் இளையராஜாதூய்மை பணியாளர் நல வாரியத்தின் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமிதுணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன்சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமிசிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் உமாதூய்மை பணியாளர் நல வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் கோவிந்தராஜ் (ஓய்வு)வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜாதூய்மை மிஷின் தலைமை நிர்வாக அலுவலர் கங்கா திலீப்சியர் அமைப்பின் நிறுவனர் அஸ்வின் குமார்வாஷ் லேப் அமைப்பின் இயக்குநர் செபின் உள்பட தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்மாணவர்கள்தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்