பெரம்பூர்: கொடுங்கையூர் ஜம்புலி தெருவை சேர்ந்த பார்த்திபன் (23), நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்றிருந்த போது, வியாசர்பாடி கோபால் தெருவை சேர்ந்த முனுசாமி (36) என்பவர், போதையில் பார்த்திபனை அழைத்துள்ளார். அவரது அருகில் சென்றதும் திடீரென இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து சரமாரி குத்திவிட்டு தப்பினார். படுகாயமடைந்த பார்த்திபனை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, முனுசாமியை பிடித்து விசாரித்தனர். அதில், 3 வருடத்திற்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது பார்த்திபனுக்கும், முனுசாமிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு பார்த்திபனை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement