Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின்சார ரயிலில் பெண்கள்குழந்தை எதிரே வாலிபர் ஆபாச சைகை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தாம்பரம்: மின்சார ரயிலில் போதை ஆசாமி ஒருவர்பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரே ஆபாச சைகையில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இவ்வாறு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் மது போதையில் இருந்த ஒருவர்ரயில் பெட்டியில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரே அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதைக்கண்ட சக பயணிகள் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால்இணைப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஹெல்ப்லைன் எண் 139க்கு தொடர்பு கொண்ட போது அதில் எதிர் திசையில் இந்தியில் பேசியுள்ளனர். இந்தி தெரியாது என்றும்ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் இணைக்குமாறும் அந்த பயணி கேட்டுள்ளார். ஆனால் அவ்வாறே இணைக்கப்படாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மது போதையில் அநாகரிக செயலில் ஈடுபட்ட நபரின் செயலை ரயிலில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.ரயிலில் அவசர உதவி எண் இருந்தும்அதை தொடர்பு கொள்ள முடியாதது பயணிகளின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. எனவேசம்பந்தப்பட்ட நபர் மீது ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்ரயில்வே உதவி எண்ணிற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் ஆபத்து நேரத்தில் தொடர்பு கொள்ளும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.