சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த வழக்கு: கருத்துகளை தெரிவிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பை விரிவு படுத்தக்கோரி வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மனுதாரர்களும் நீதிமன்றத்தில் கருத்தை தெரிவிக்கலாம் என்று கூறி விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.