சென்னை, செப்.30: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செல்ல ஏதுவாக நேற்று இரவு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, ஆயுதப் பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். குறிப்பாக, பேருந்து மூலமாக சொந்த ஊர் செல்லும் மக்கள், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பயணம் செய்வார்கள். அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், எளிதில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செல்ல ஏதுவாக, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு 7.45 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு மின்சார ரயில் 20 நிமிடத்தில் கூடுவாஞ்சேரி சென்றடைந்தது. மற்றொரு சிறப்பு மின்சார ரயில் இரவு 8.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கூடுவாஞ்சேரிக்கு சென்றது. இதனால், பயணிகள் எளிதாக பேருந்து நிலையம் செல்ல முடிந்தது.
+
Advertisement