பெரம்பூர், செப்.30: கொளத்தூர் சிவசக்தி நகர் விரிவு 3வது குறுக்கு தெருவை சேர்ந்த துலுக்கானம் (52) என்பவரது வீட்டில் இருந்து நேற்று பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறினர். இந்த விபத்தில் துலுக்கானத்தின் வீடு முழுவதுமாக சேதமடைந்தது. சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த 2 வீடுகளிலும் தீ பரவியது. மொத்தம் 4 வீடுகள் சேதமானது. தகவலறிந்த கொளத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். கொளத்தூர் காவல் சரக உதவி கமிஷனர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.