அண்ணாநகர், நவ.25: சென்னை திருமங்கலம் பகுதியில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மது மற்றும் போதைப்பொருட்களை கொடுத்து ஒரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்படி, போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சஞ்சய் (25), பாரிஅரசன் (24) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



