பெரம்பூர், நவ.25: வியாசர்பாடி கென்னடி நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று முன்தினம் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக, நரேஷ் குமார் (31) என்பவரை கைது செய்தனர். இவர், தன்னுடன் பாரிமுனை பகுதியில் வேலை செய்யும் கிஷோர் குமார் என்பவரிடம், தனக்கு போதிய வருவாய் கிடைக்காததால், கஞ்சா விற்பனை செய்ய உள்ளேன், எனக்கூறி உள்ளார். இதையடுத்து, கிஷோர் சூலூர்பேட்டையில் உள்ள அவருக்கு தெரிந்த நண்பரிடம் இருந்து இரு தினங்களுக்கு முன் கஞ்சா வாங்கித் தந்தது தெரிய வந்தது.
இதையடுத்து நரேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர் தலைமறைவாக உள்ள கிஷோர் குமாரை தேடி வருகின்றனர்.



