சென்னை, செப்.24: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், சென்னையில் இன்று 11 வார்டுகளில் நடைபெற உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (24ம் தேதி) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-9ல் திருவொற்றியூர் குப்பம், சென்னை தொடக்கப்பள்ளி அருகில் உள்ள துலுகானத்தம்மன் கோயில் தெரு, மாதவரம் மண்டலம், வார்டு-23ல் மேற்கு காவாங்கரையில் உள்ள ராணி சங்குபதி திருமண மண்டபம், இராயபுரம் மண்டலம், வார்டு-57ல் சௌகார்பேட்டை, அண்ணா பிள்ளை தெருவில் உள்ள சந்திரபுரி டிரஸ்ட் மண்டபம், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-78ல் சூளை, சச்சிதானந்தம் தெருவில் உள்ள அறிஞர் அண்ணா மாளிகை சமுதாயக் கூடம், அம்பத்தூர் மண்டலம், வார்டு-89ல் முகப்பேர் பிரதான சாலையில் உள்ள சின்னசாமி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
மேலும், அண்ணாநகர் மண்டலம், வார்டு-104ல் ஐ பிளாக் 28வது தெருவில் உள்ள கம்பர் குடியிருப்பு குழந்தைகள் விளையாட்டுத் திடல், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117ல் தியாகராயநகர், கிரியப்பா சாலையில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-132ல் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-146ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபம், பெருங்குடி மண்டலம், வார்டு-183ல் பாலவாக்கம், விஜிபி லேஅவுட் 2வது பிரதான சாலையில் உள்ள விஜிபி லேஅவுட் பார்க், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-198ல் கிராம நெடுஞ்சாலையில் உள்ள செல்லியம்மன் கோயில் மண்டபம் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.