பெரம்பூர், ஆக.22: காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மாத்திரைகளை சாப்பிட்டு நர்ஸ் தற்கொலை முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், குரோம்பேட்டையில் உள்ள காப்பகத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் சங்கீதாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் விசாரணை செய்ததில் சங்கீதா, 15 பெயர் தெரியாத மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தியதில், சங்கீதா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவர் தற்போது சங்கீதாவை திருமணம் செய்ய மறுத்ததால் சங்கீதா தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement