Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தாய்-மகள் இரட்டை கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை, நவ.21: குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பேசில் கார்டன் பகுதியை சேர்ந்த ராமசாமி, ஓமன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆசிரியரான தேன்மொழி (30). இவர் தனது தாய் வசந்தா, சுரபி  (6) மற்றும் 6 மாத குழந்தை குண ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது வீட்டில் வேலைக்கார பெண்ணாக சத்யா (28) என்பவர் பணிபுரிந்தார். கடந்த 2016 ஏப்ரல் 19ம் தேதி தேன்மொழி வேலைக்குச் சென்றிருந்தபோது அவரது தாய் வசந்தா மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில் சத்யா கூட்டாளிகளான ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகியோரை அழைத்து வந்து வசந்தாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

தேன்மொழியை தொடர்புகொண்டு வீட்டிற்கு வரவழைத்து, அவரையும் கொலை செய்துள்ளனர். இதைப் பார்த்த 6 வயது குழந்தையையும் மற்றும் 6 மாத குழந்தையும் கொலை செய்ய முயற்சித்தபோது இருவரும் மயக்கம் அடைந்ததை கண்டு இறந்து விட்டதாக எண்ணி வீட்டில் இருந்த 16 சவரன் நகை, ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கில், மாவட்ட நீதிபதி தீப்தி அறிவுநிதி நேற்று தீர்ப்பு வழங்கினார். நகைக்காக கொடூரமாக கொலை செய்த சத்யா, ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகிய 3 பேருக்கும் 7 பிரிவுகளின் கீழ் தலா 6 ஆயுள் தண்டனையும், ரூ.80,000 அபராதமும் வழங்கினார். தண்டனை முழுவதையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு நிதி உதவி வழங்கவும், குற்றவாளிகள் செலுத்தும் அபராத தொகையையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.