Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐ.டி காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை, ஆக.20: ஐ.டி காரிடர் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும், என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரமணி, ஐ.டி காரிடர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில், செயற் பொறியாளர், இயக்கம் & பராமரிப்பு, ஐ.டி காரிடர் அலுவலகம், 1வது தளம், 110 கி.வோ, டைடல் பார்க் துணை மின் நிலைய வளாகம், சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, தரமணி, சென்னை-113 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.