சென்னை, நவ.18: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2382 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 790 கன அடி மழைநீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 47 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2952 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 1200 கன அடியாக உயர்த்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2827 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 45 கன அடி வீதம் நீர்வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 1200 கன அடியாக உயர்த்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 622 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.
* கண்ணன்கோட்டை ஏரியின்மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 435 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை, சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 9,192 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.


