ரூ1.80 கோடி மதிப்பீட்டில் மாதவரம் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க முடிவு
மாதவரம், ஆக.18: மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தை நவீனமுறையில் கட்டமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். அதன்பேரில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ1.80 கோடி மதிப்பீட்டில் மாதவரம் பேருந்து நிலையத்தை நவீனமுறையில் சீரமைக்கும் பணிகளை, கடந்த ஏப்ரல் மாதம் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
உதவி செயற்பொறியாளர் செந்தமிழன், உதவி பொறியாளர் சரவணமூர்த்தி ஆகியோர் தலைமையில், அலங்கார வளைவு மற்றும் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, பயணிகள் அமர்வதற்கு நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.