Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு

சென்னை, செப்.17: திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்ைத முன்னிட்டு சென்னையில் இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் கவனத்திற்கு இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கீழ்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

மாலை 3 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின்பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வெ.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானாவில் இருந்து டிமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும் போது நாரயணாகுரு சாலை ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும் போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஒட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம். எனவே வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது