சென்னை, டிச.11: மின்வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தாம்பரம் கோட்டதிற்கு உட்பட்ட மேற்கு தாம்பரம், புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர் வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், கடப்பேரி, நேரு நகர், சேலையூர், சித்தாலப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் மின்சார துறை சார்ந்த குறைகலை தெரிவித்து விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.
+
Advertisement


