பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, செப்.10: பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-கூடூர் ரயில் நிலையம் மற்றும் பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே இரவு 11.20 மணிக்கும் மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே இரவு 9.25 மணிக்கு நாளை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் திருப்பதி-காட்பாடி இடையே(ரயில் எண்:67205) காலை 7.35 மணிக்கும், அதேபோல், மறுமார்க்கமாக காட்பாடி-திருப்பதி(ரயில் எண்: 67210) இடையே இரவு 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் 12, 15, 19, 22, 26 மற்றும் செப்டம்பர் 3, 6, 10, 13, 17, 20, 24, 27, 31, அக்டோபர் 3, 7, 10, 14, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், விழுப்புரம்-திருப்பதி(ரயில் எண்: 16854) இடையே காலை 5.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் காட்பாடி-திருப்பதி இடையேயும், மறுமார்க்கமாக திருப்பதி- விழுப்புரம் இடையே (ரயில் எண் 16853) மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் வரும் 12, 15, 19, 22, 26, 29 செப்டம்பர் 3, 6, 10, 13, 17, 20, 24, 27, 31 அக்டோபர் 3, 7, 10, 14, 17 ஆகிய நாட்களில் திருப்பதி-காட்பாடி இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.