துரைப்பாக்கம், அக்.9: மெட்ரோ ரயில் பணியிடத்தில் இருந்த இரும்பு பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓஎம்ஆர் சாலை மத்திய கைலாஷ் சந்திப்பு முதல் சிறுசேரி வரை சுமார் 20 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் நடைபெறும் மெட்ரோ பணியிடத்திலிருந்து சுமார் 60 கிலோ இரும்பு பொருட்கள் திருடு போனதாக துறைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இரும்பு பொருட்கள் திருடிய கண்ணகி நகரைச் சேர்ந்த சதீஷ்(22), பிராங்ளின்(20), விக்னேஷ்(22), வெற்றிவேல்(27) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.