Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விம்கோ நகர் பணிமனையில் ஒரு லட்சம் சதுர அடியில் வர்த்தக பகுதி: ஒப்பந்தத்திற்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு

சென்னை, டிச.5: விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள வணிக கட்டுமானப் பகுதிக்கு உரிமம் வழங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. சில்லரை விற்பனை, அலுவலக இடங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவு விடுதிகள், உடற்பயிற்சி மையம், பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் பல வணிகங்களை அமைப்பதற்கு இது மிகவும் உகந்த இடமாக இருக்கும். உரிமம் பெறுபவர் இந்த இடத்தை தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம் அல்லது பிற வணிக நிறுவனங்களுக்கு உட்புற வாடகைக்கு விடலாம். உள் அலங்காரம் செய்துகொள்ள முடியும்.

அனைத்து அடிப்படை உபயோகத்திற்கும் தேவையான வசதிகளுடனும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு போதுமான வாகனம் நிறுத்தும் இடத்துடன் வழங்கப்படும்.

நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் (15 ஆண்டுகளுடன் மேலும் 5 ஆண்டுகள்) ஒரு மாதத்திற்கான அடிப்படை விலை, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.349 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு இணையதளம் வழியாக வெளிப்படையான ஒப்பந்த செயல்முறை மூலம் இந்த இடம் வழங்கப்படும். டிசம்பர் 18ம் தேதி ஒப்பந்த படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி. மேலும் விவரங்களுக்கு marketing@cmrl.in என்ற மின்னஞ்சலில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வணிக வளாகங்கள், சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்ததிட்டம் வட சென்னையில் திட்டமிடப்பட்ட மிகப் பெரிய வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாகத் தனித்து நிற்கிறது.