திருவொற்றியூர், டிச.4: திருவொற்றியூர் குப்பம் அடுத்த அப்பர்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ், மீனவர். இவரது மனைவி சுனிதா. இந்நிலையில், நேற்று அதிகாலை சந்தோஷ் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பலத்த இடி மற்றும் காற்றுடன் மழை பெய்ததால் வீட்டின் சிமெண்ட் மேற்கூரை நொறுங்கி விழுந்தது. இதில், அதிஷ்டவசமாக உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, திமுக நிர்வாகி எம்.எல்.சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். மேலும், தமிழக அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

