Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம் கடைகளில் பூஜை பொருள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்:  பூ, பழங்கள் விலை கடும் உயர்வு  பஸ், ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்

சென்னை, அக்.1: ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க சென்னையில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூ, பழங்கள் விலை கடுமையாக உயர்ந்தது. தொடர் விடுமுறையால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும் பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற ெபாருட்கள் வைத்து வழிபடுகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை நேற்று முன்தினமே களைகட்ட தொடங்கியது. நேற்று விற்பனை மேலும் களைகட்டியது. நேற்று மாலையில் மேலும் விற்பனை விறுவிறுப்படைந்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள், பூக்கள் விலை அதிகமாக இருந்தது. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி ரூ.800லிருந்து ரூ.1,800க்கும், ஐஸ் மல்லி 800 இருந்து ரூ.1,600க்கும், ஜாதிமல்லி ரூ.700லிருந்து ரூ.1,200க்கும், முல்லை ரூ.700லிருந்து ரூ.1000க்கும், கனகாம்பரம் ரூ.800லிருந்து ரூ.1,500க்கும், அரளி பூ ரூ.350லிருந்து ரூ.500க்கும், சாமந்தி ரூ.180லிருந்து ரூ.300க்கும், சம்பங்கி ரூ.200லிருந்து ரூ.350க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100லிருந்து ரூ.180க்கும். சாக்லேட் ரோஸ் ரூ.200லிருந்து ரூ.280க்கும் விற்றது. இதேபோல ஆப்பிள் ஒரு கிலோ ரூ.100லிருந்து ரூ.200 வரையும் சாத்துக்குடி ரூ.70லிருந்து ரூ.120 வரையும், மாதுளை ரூ.150க்கும், கொய்யா ரூ.50க்கும், ஆரஞ்சு ரூ.75க்கும் விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் பழங்கள் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகமாக விற்கப்பட்டது.

மேலும் தேங்காய் ஒரு கிலோ ரூ.72க்கும் விற்கப்பட்டது. பூசணிக்காய் ரூ.20, மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரூ.200 முதல் ரூ.400 வரையும், வாழை இலை ஒன்று ரூ.15, எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.70, வெற்றிலை ஒரு கவுளி (80 எண்ணிக்கை) ரூ.40, வாழைக்கன்று ஒரு கட்டு ரூ.80 முதல் 100 வரையும், தோரணம் ஒரு கட்டு ரூ.50, மாங்கொத்து ஒரு கட்டு ரூ.15க்கும் விற்கப்பட்டது. இதேபோல ஆயுத பூஜையில் முக்கிய இடம் பிடிக்கும் அவல் ஒரு ரூ.150க்கும், பொரி ஒரு படி ரூ.15 முதல் ரூ.20 வரையும், உடைத்த கடலை ரூ.200, நாட்டு சர்க்கரை ரூ.150க்கும் விற்னையானது. விலை அதிகரித்த போதும் பொருட்படுத்தாமல் பூஜை பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர்.

இன்று ஆயுத பூஜை, நாளை விஜய தசமி விடுமுறை நாளாகும். 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் லீவு எடுத்தால் தொடர்ந்து 5 நாட்கள் தொடர் விடுமுறையாகும். இந்த நிலையில், சென்னையில் வசிப்போர் மற்றும் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுமுறையை கழிக்க சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர். இதனால் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் நிற்க கூட முடியாத அளவுக்கு நெரிசலில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் எப்படியாவது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதனால், நேற்று காலை முதல் கோயம்பேடு, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். இதனால் பஸ் நிலையங்கள் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.