நித்திரவிளை, ஜூலை 9: நித்திரவிளை அருகே தூத்தூர் புனித தோமையர் தெரு பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (50), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு சொந்தமான நிலம் மாம்பழஞ்சி பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். சம்பவத்தன்று காலை 9 மணியளவில் நிலத்தின் அருகே வசிக்கும் மல்லிகா, மல்லிகா அக்கா மகள், மற்றும் பிரேமா, சோபி, டில்லி, மற்றும் ஒருவர் சேர்ந்து சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது சம்பந்தமாக ரெஜின் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் மேற்படி 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement