பண்ருட்டி, ஜூன் 6: பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கத்தை சேர்ந்தவர் ராம்குமார் (29). அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அண்ணன் தம்பிகளான இருவருக்கும் திருமணம் ஆகி பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மனைவிகளுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று பார்த்திபன், பார்த்திபன் மனைவி குணசுந்தரி மற்றும் கொளஞ்சியப்பன் ஆகிய மூவரும் சேர்ந்து ராம்குமாரை அசிங்கமாக திட்டி 6 மாத கர்ப்பிணியான அவரது மனைவி சரஸ்வதியை கீழே தள்ளி கல் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கினார்களாம். இதில் காயமடைந்த சரஸ்வதி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா, பார்த்திபன், குணசுந்தரி மற்றும் கொளஞ்சியப்பன் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement


