திருப்பூர், ஜூலை 11: திருப்பூர் தாராபுரம் சாலை பெருச்சிபாளையம் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல் தளத்தில் டைல்ஸ் கற்கள் சேதம் அடைந்து நடந்து செல்பவர்களின் பாதங்களில் காயம் ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாக தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து உடைந்து காணப்பட்ட டைல்ஸ் கற்களை பெயர்த்து எடுத்து புதிய டைல்ஸ் கற்கள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய மருத்துவமனையில் அனைத்து தளங்களிலும் முறையாக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
+
Advertisement