நித்திரவிளை, ஜூலை 10: கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி நெடும்பழஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (72). செங்கவிளை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல மதியம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றவர், மதியம் சாப்பிட்டு விட்டு அறையில் படுத்து தூங்கி உள்ளார். ஆனால் மாலை 6 மணி ஆன பிறகும் அறையிலிருந்து ராஜன் வெளியே வரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜன்னல் கம்பியில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் ராஜன் காணப்பட்டார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement