Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்வே தண்டவாளத்தில் பணம், ஆவணங்களுடன் வாலிபர் சடலம் மீட்பு

சமயபுரம், ஜூலை 10: நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டர்கோவில் ரயில் நிலையம் அருகே கீரமங்கலம் பகுதியில் தண்டவாளத்தின் அருகே 45 வயது மிக்க ஆண் சடலமாக கிடந்துள்ளது. தகவல் அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் ராயல் ரைஸ் மில் தெருவை சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் முத்து செல்வம் பிள்ளை என தெரியவந்தது. மேலும் சடலம் கிடந்த இடத்தை சுற்றி ஆதார் கார்டு, ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன.

போலீசார் அதனை கைப்பற்றினர். சேகரித்து பார்த்தபோது ரூ.9,170 இருந்துள்ளது. தொடர்ந்து உடலை கைப்பற்றிய விருத்தாச்சலம் இரும்பு பாதை ரயில்வே போலீசார் உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து இவர் எந்த ரயிலில் பயணித்தார் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா ? அல்லது வேறு யாரும் இவரை தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சித்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .