மார்த்தாண்டம், ஜூலை 9: மார்த்தாண்டம் அருகே பம்மம் படந்தைபாறை விளையை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (60). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி இரவு 10 மணியளவில் தனக்கு சொந்தமான பைக்கை வீட்டு முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் அதிகாலையில பார்த்த போது பைக்கை காணவில்லை. பலரிடம் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதையடுத்து அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement