மொடக்குறிச்சி, ஜூன் 4: சிவகிரி இளங்கோ விதியைச் சேர்ந்தவர் கருப்பையா (51). பந்தல் மற்றும் மைக் செட் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்தூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த பைக் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கருப்பையா தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் கருப்பையாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், கருப்பையா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement


