நாகர்கோவில், ஜூலை 10: திருவட்டாறு, நாகர்கோவில் பள்ளிகளில் பேபி ஜெபகுமாரின் மேஜிக் ேஷா நிகழ்ச்சி நடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ‘அறிவியல், சமூக விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் கூடிய மெகா மேஜிக் ஷோ நிகழ்வை பேபி ஜெபகுமார் நடத்தி உள்ளார். இவர் சமீபத்தில் நாகர்கோவில் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருவட்டாறு எக்செல் குளோபல் பள்ளியிலும் மேஜிக் ஷோ நடத்தி மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் செய்திருந்தன.
+
Advertisement