நீடாமங்கலம், ஜூலை 11: மாணவர்கள் அடிப்படை திறன்களில் சிறந்து விளங்கிய நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர்களின் அடிப்படை திறன்களில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு தமிழக அரசு பாராட்டி விருது வழங்கி சிறந்த முன்னோடி பள்ளியாக ஆக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு திருச்சி தேசிய கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் கற்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பத்து பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெ.இன்பவேணி சான்றிதழை வழங்கி கற்கோவில் பள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் அன்புமணி, இடைநிலை ஆசிரியர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.