ஜெயங்கொண்டம், அக்.31: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக இஸ்லாமிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தமுமுக நகரத்தலைவர் ஜபருல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் முஸ்தாக்தீன், தலைமைக் கழக பேச்சாளர் சையது மற்றும் சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் மைதீன்ஷா, சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சையது நபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமது இஸ்மாயில், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது நகர மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
  
  
  
   
