ஜெயங்கொண்டம், அக்.30: உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில், உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் பேசினர். உடையார்பாளையத்தில் ஆர்டிஓ ஷீஜா தலைமையில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், ஒன்றிய செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு யூரியா போன்ற உரத்தட்டுப்பாடு போக்க வேண்டும்.
ஆண்டிமடம் வட்டத்தில் தஞ்சாவூரான் சாவடி, மருதூர், வாரியங்காவல், ஒலையூர் போன்ற கிராமங்களில் அக்டோபர் 31ல் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற அறிவிப்பானையை ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் (ஸ்பிரேயர்) அளிக்க வேண்டும் பொன்னேரியில் உள்ள சாலையில் மின் விளக்கு அமைத்திட வேண்டும், உட்கோட்டை குறுமங்கரையில் சிறு பாலம் அமைக்க வேண்டும், ரோடு செக்டாரில் ட்ரைனேஜ் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
