ஜெயங்கொண்டம், அக்.30: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள பாப்பாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர்கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் ஊழல் ஒழிப்பு குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது. மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு குறித்த பல்வேறு ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாப்பாக்குடி அலுவலக உதவி பொது மேலாளர் கலைச்செல்வி பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பவர் கிரீட் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு குறித்தான உறுதிமொழி ஏற்றனர்.
