அரியலூர், ஆக. 30: அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் வடிகால் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் தலைமைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் உத்தரவின்படியும் கோட்டப் பொறியாளர் வழிகாட்டுதலின்படியும் பருவமழை தொடங்க உள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் மாநில சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளில் உள்ள பெரிய பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் பராமரிப்பு பணி மேற்கொண்டு நீர்வழிப்பாதையை சுத்தம் செய்தல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலையான அரியலூர் - முத்துவாஞ்சேரி - ஸ்ரீபுரந்தான் காரைக்குறிச்சி சாலை கிமீ 12/10 ல் உள்ள பாலத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டு நீர்வழிப்பாதையை சுத்தம் செய்தல் பணி செய்து முடிக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து மீதமுள்ள மாநில சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளில் பாலங்கள் பராமரிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
+
Advertisement