ஜெயங்கொண்டம் நவ.29: திருமானூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் திருமானூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து கேட்டிருந்தார்.
வழக்குகளை விரைவாக முடிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான குற்ற வழக்குகளில் துரிதமாக செயல்படவும், மேலும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வின் போது திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் உதவிஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தார்கள். மேலும் காவல் நிலையத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.

