தா.பழூர், ஆக.29: தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் ஊராட்சி குமணந்துறை கிராமத்தில் சமுத்திரம் ஏரி கரையை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. தமிழக அரசு பசுமை தமிழகம் திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் குமணந்துறை கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு நூறு நாள் பணியாளர்களிடம் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், மக்களை பாதுகாக்கும் வனகாடுகளை பாதுகாப்பது,
நாட்டு மரங்கள் நடுவது, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தன்னார்வ அமைப்பு ,பள்ளி மாணவர்களுடன் செயல்படுதல், வீடுகளில் மரக்கன்று நடுதல் பற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோவிந்தபுத்தூர் தன்னார்வ அமைப்பு அக்னி சிறகுகள் இளைஞர்கள் கலந்து கொண்டு பசுமையான ஊராட்சி பசுமையான தமிழகம் உருவாக்குதல் மரங்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இத்திட்டதில் தங்கள் கிராமத்தை பசுமையான ஊராட்சியாக உருவாக்க இணைந்து செயல்பட்டனர்.