குன்னம், செப்.27: குன்னம் அருகே அகரம்சீகூர் கிராமத்தில் ஒகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழா நடைபெற்றது. முகாம் அலுவலர் பிச்சை பிள்ளை அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஏழு நாட்கள் நடைபெற உள்ளது.
துவக்க விழாவை முன்னிட்டு அய்யனார் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முகாமில் கிராமத்தில் உள்ள தெருக்களில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், வெள்ளாறு பாலம் தூய்மை செய்தல், கால்நடை மருத்துவ முகாம், மனநல மருத்துவம், யோகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் அண்ணாதுரை, அன்பானந்தம், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.