Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்னம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டி வினா விடை தொகுப்பு

குன்னம், ஆக. 27: குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிகளில் வழிகாட்டி வினா விடை தொகுப்பினை மாணவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இதே போல் வேப்பூர் ஒன்றியம் பெரியம்மாபாளையம் ஒதியம் மருவத்தூர் பேரளி பீல்வாடி எழுமூர் காருகுடி பெருமத்தூர் நன்னை வேப்பூர் பரவாய் வரகூர் புது வேட்டக்குடி காட்டூர் பள்ளிகளில் வழிகாட்டி வினா, விடை தொகுப்பினை சுமார் 2500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் தேர்வை வெல்வோம் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

நன்னை அரசு உயர்நிலை பள்ளிக்கு வந்த அமைச்சர் சிவசங்கர், அங்கு வகுப்பறையில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களிடம் நான் யார் என தெரியுமா? என கேட்டார் அதற்கு மாணவர்கள் நீங்கள் அமைச்சர் சிவசங்கர் என உடனே சொன்னார்கள். பிறகு நான் தரும் வினா விடை தொகுப்பு தேர்வுக்கு மிக அவசியமானது. நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து நல்ல மார்க் வாங்கி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன். வேப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நீலமேகம், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், பி.கே.சேகர், முன்னாள் வேப்பூர் ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, மாவட்ட அமைப்பாளர் சன் சம்பத், முன்னாள் நன்னை ஊரட்சி மன்ற தலைவர் சின்னு, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.