ஜெயங்கொண்டம், ஆக.22: உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆல் த சில்ரன் சார்பில் ட்ரஸ்ட் சார்பில், பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். கணினி ஆசிரியர் மஞ்சுளா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கலந்து கொண்டு, பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அரசு வழங்கும் நலத்திட்டங்கள் உதவித்தொகைகள், தமிழக அரசு பெண்களுக்காக வழங்கும் நல திட்டங்கள், பெண் கல்வி உதவித்தொகை, பெறுவது பற்றியும், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழாசிரியர் ராமலிங்கம், பாவை சங்கர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் தமிழரசி நன்றி கூறினார்.